பொது வீட்டுவசதி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பொதுமக்கள் நடைமுறைக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகவும் மாநில அரசு தொடர்ந்து மின்னியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்று மாநில வீட்டுவசதி, ஊராட்சி மற்றும் நகர மற்றும் நாடு திட்டக் குழுத் தலைவர் ஜகதீப் சிங் தியோ தெரிவித்தார்.
நடைமுறையை மீறி யாராவது பிடிபட்டால் பினாங்கு நகராட்சி மன்ற மற்றும் செபெராங் பெராய் நகராட்சி மன்ற அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை செய்வார்கள் என்றும், அது தொடர்ந்தால் காவல் துறை மேலும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
“பினாங்கு இன்னும் பச்சை மண்டலமாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், கொவிட்19 தொற்றுநோய்க்கு எதிரான போர் முடிவடையவில்லை. எனவே நடைமுறைகளை கைவிடுவது தொடர்பாக எந்த சமரசமும் ஏற்படாது. ” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அனைத்து அம்சங்களிலும் கொவிட்19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட மாநில அரசு ஏழு செயற்குழுக்களை அமைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.