Home One Line P1 கொவிட்19: 4 புதிய சம்பவங்கள் பதிவு, ஒருவர் மலேசியர்

கொவிட்19: 4 புதிய சம்பவங்கள் பதிவு, ஒருவர் மலேசியர்

342
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,600-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 4 பாதிப்புகளில், 3 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள். உள்ளூரிலேயே ஒருவர் தொற்றுக் கண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று 40 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,271-ஆக உயர்ந்தது.

208 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.