Home One Line P1 புக்கிட் புரோகா பகுதியை ஜூன் 27 முதல் மூட உத்தரவு

புக்கிட் புரோகா பகுதியை ஜூன் 27 முதல் மூட உத்தரவு

504
0
SHARE
Ad

புத்ராஜெயா: தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் பிரிவு 18- இன் கீழ் புக்கிட் புரோகா பகுதியை மூட சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதற்கான நிலை குறித்த ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் போது சுகாதார அமைச்சு இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனைத் தெரிவித்தார்.

“நடைமுறைகளின்படி செயல்படாத கடைகளும், நிறுவனங்களும் உள்ளன.

#TamilSchoolmychoice

“எடுத்துக்காட்டாக, சமீபத்தில் சிலாங்கூரின் புக்கிட் புரோகாவில் கூட்டம் அதிகமாக இருந்தது.” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கொவிட் 19 பாதிப்பு பரவுவதற்கு எதிராக தேசிய பாதுகாப்பு அமைப்பாக நடைமுறைகள் மற்றும் புதிய இயல்பு வாழ்க்கையை அரசாங்கம் அடிக்கடி வலியுறுத்தியது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

புதிய நடைமுறைகள் மற்றும் இயல்பானவற்றுடன் இணங்குவதை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சுகாதார அமைச்சு பொதுமக்களை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.

“கொவிட்19 நோய்த்தொற்று சங்கிலியை உடைப்பதற்கான எங்கள் முயற்சிகள் அனைத்தும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் தொடரும் என்று சுகாதார அமைச்சகம் நம்புகிறது,” என்று அவர் கூறினார்.