Home One Line P2 தமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு

தமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு

1272
0
SHARE
Ad

சென்னை – தற்போது நடைமுறையில் இருந்து வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளை எதிர்வரும் ஜூலை 31 வரை நீட்டிக்கும் உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கட்கிழமை இரவு பிறப்பித்தார்.

இந்தப் புதிய உத்தரவு தற்போது இருக்கும் தளர்வுகளோடு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு எந்தவித தளர்வுகளுமின்றி தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசின் அறிவிப்பு தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

மகராஷ்டிரா மாநிலமும் இதைப் போலவே ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை இன்று பிறப்பித்தது. அதைத் தொடர்ந்தே தமிழ் நாடும் இதே போன்ற உத்தரவைப் பிறப்பித்தது.

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 19,700 புதிய கொவிட்-19 சம்பவங்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டன.

இதுவரையில் மொத்தம் 548,318 சம்பவங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இதில் 210,120 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட்-19 பாதிப்புகளால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 16,475 ஆக உயர்ந்திருக்கிறது.