Home One Line P2 விசாகப்பட்டினத்தில் மீண்டும் வாயுக் கசிவு, இருவர் மரணம்

விசாகப்பட்டினத்தில் மீண்டும் வாயுக் கசிவு, இருவர் மரணம்

473
0
SHARE
Ad

புது டில்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் ஏற்பட வாயுக் கசிவால், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் இதே போன்ற ஒரு சம்பவத்தில் அங்கு 11 பேர் மரணமுற்றனர். 1000 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர்.

நேற்றைய சம்பவத்தில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இது சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தகவல்கள் கோரியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தரப்பில் இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த இரசாயன ஆலையில் இருந்து நச்சு வாயு கசிந்தது. இதனால், சுற்றியுள்ள மூன்று கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கதவுகளை உடைத்து மயக்கமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.