Home One Line P2 போயிங் 737 மேக்ஸ் விமானம் மீண்டும் சோதனையில் இறங்கியது

போயிங் 737 மேக்ஸ் விமானம் மீண்டும் சோதனையில் இறங்கியது

490
0
SHARE
Ad

வாஷிங்டன்: யுஎஸ் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) திங்களன்று போயிங் 737 மேக்ஸ் விமானத்தை சோதனை செய்யத் தொடங்கியது.

இவ்வகை விமானத்தின் சேவை முன்னதாக இடைநிறுத்தப்பட்டது.

சான்றிதழ் செயல்முறைக்கான முதல் சுற்று விமான சோதனைகளை நடத்துவதற்காக சியாட்டிலிலுள்ள போயிங் களத்தில் இருந்து ஒரு போயிங் 737 மேக்ஸ் புறப்பட்டது என்று எப்ஏஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

737 மேக்ஸ் தானியங்கி விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் போயிங்கின் முன்மொழியப்பட்ட மாற்றங்களை மதிப்பீடு செய்ய, போயிங் இந்த வாரம் ஒரு சோதனைத் திட்டத்தை நடத்துகிறது என்பதையும் எப்ஏஏ உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செயல்முறை எப்ஏஏ சான்றிதழ் தரங்களை பூர்த்தி செய்வதற்கான பல்வேறு நடைமுறைகள் உட்பட மூன்று நாட்கள் ஆகும். எப்ஏஏ மற்றும் போயிங்கைச் சேர்ந்த விமானிகள் மற்றும் பொறியியலாளர்களால் இந்த சோதனைகள் நடத்தப்படும்.

போயிங் 737 மேக்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து உலகளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் விமான கட்டுப்பாட்டு மென்பொருளே, இவ்வகை விமானத்தின் இரண்டு விபத்துக்களுக்கு காரணம் என்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.