Home One Line P1 சினி இடைத்தேர்தல்: முன்கூட்டிய வாக்களிப்பு விரும்பத்தகாத சம்பவங்கள் இல்லாமல் சீராக நடைபெற்றது

சினி இடைத்தேர்தல்: முன்கூட்டிய வாக்களிப்பு விரும்பத்தகாத சம்பவங்கள் இல்லாமல் சீராக நடைபெற்றது

490
0
SHARE
Ad

குவந்தான்: சினி மாநில சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலின் முன்கூட்டிய வாக்களிப்பு இன்று இங்குள்ள சினி காவல் நிலைய தகவல் அறையில் மதியம் முடிவுற்றது.

இந்த முன்கூட்டிய வாக்களிப்பு செயல்பாட்டில் 18 காவல் துறையினரில் 17 பேர் இன்று வாக்களிக்க தகுதியுடையவர்களானர், ஒருவர் வாக்களிக்கவில்லை.

நான்கு மணி நேர முன்கூட்டிய வாக்களிப்பு செயல்முறை காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை உள்ளடக்கிய தேர்தல் பார்வையாளர்களும் பார்வையிட்டனர்.

#TamilSchoolmychoice

முன்கூட்டிய வாக்களிப்பு செயல்முறையை கண்காணிக்க, தேர்தல் ஆணைய செயலாளர் இக்மால்ருடின் இஷாக், சினி இடைத்தேர்தல் நிர்வாக அதிகாரி டத்தோ ஜலிசா சுல்கிப்லி மற்றும் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள், முகமட் ஷரீம் முகமட் ஜின் (தேசிய முன்னணி), மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள், தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு, முகமட் சுக்ரி முகமட் ரம்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்கூட்டிய வாக்களிப்பு செயல்முறை எந்தவிதமான தாக்கமும் இல்லாமல் சீராக நடைபெற்றதாக ஜலிசா கூறினார்.

“சினி முன்கூட்டிய வாக்களிப்பு செயல்முறைக்கு நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப நடத்தப்பட்டதில் நான் திருப்தி அடைகிறேன். எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் இல்லாமல் அது சீராக நடந்தது. ” என்று அவர் கூறினார்.