Home One Line P1 ஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்

ஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்

1037
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 5 மற்றும் 6- ஆம் ஆண்டுக்கான தொடக்கப் பள்ளி மாணவர்கள் மற்றும் 1 முதல் 4- ஆம் படிவம் வரையிலான இடைநிலை வகுப்புகள் ஜூலை 15- ஆம் தேதி தொடங்கும் என்று கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் தெரிவித்தார்.

இதற்கிடையில், 1- ஆம் ஆண்டு முதல் 4- ஆம் ஆண்டு வரையிலான மாணவர்கள் ஒரு வாரம் கழித்து ஜூலை 22- ஆம் தேதி பள்ளிக்குச் செல்லத் தொடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.

“மீண்டும் பள்ளி திறக்கும் தேதி கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மலேசிய கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஜூலை 15 முதல் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், எஸ்பிஎம் உட்பட முக்கியத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 6 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

எஸ்பிஎம் தேர்வு இந்த ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறவிருப்பதாக அமைச்சகம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

நவம்பரில் திட்டமிடப்பட்டிருந்த எஸ்டிபிஎம் தேர்வுக்கான தேதிகளும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 12- 18 வரையிலான இரண்டாவது தவணைக்கும், அடுத்த ஆண்டு மார்ச் 1-9 வரையிலான 3-வது தவணைக்கும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

முதலாவது தவணைக்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 22- 25- க்கு மாற்றப்படுகிறது.

எஸ்பிஎம் தேர்வுகளுக்கான புதிய தேதிகள்

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜூன் 23 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த எஸ்பிஎம் மறு அமர்வுக்கான வாய்வழி மற்றும் எழுத்துத் தேர்வுகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 30- க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எஸ்விஎம் அமர்வு 1 இந்த ஆண்டு ஆகஸ்ட் 3- 14 மற்றும் செப்டம்பர் 28- அக்டோபர் 9 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 18- 29 மற்றும் அடுத்த ஆண்டு மே 17- 28 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.

எஸ்விஎம் வரலாற்று கட்டுரை அடுத்த ஆண்டு ஜனவரி 7- ஆம் தேதி நடைபெறும்.

ஆரம்பத்தில் இந்த ஆண்டு அக்டோபர் 21 முதல் 28 வரை திட்டமிடப்பட்டிருந்த எஸ்டிஏஎம் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17- 25 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, மாணவர்களுக்கு கற்றுக்கொள்ள போதுமான நேரம் இருப்பதற்கும், அவர்களின் தேர்வுகளுக்கு உட்கார்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகக் கூறியது.

“2021- ஆம் ஆண்டிற்கான பள்ளி காலத்தின் தொடக்கத்திற்கான விரிவான தேதிகள் உள்ளிட்ட தேர்வுக்கான தளவாடங்களை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை கல்வி அமைச்சு கணக்கில் எடுத்துக்கொண்டது. அது பின்னர் அறிவிக்கப்படும்.

“அடுத்த ஆண்டு பள்ளி காலம் சீராக தொடரும் என்பதை உறுதிப்படுத்த அமர்வின் தொடக்கத்தை மறுசீரமைப்பது முக்கியம்.” என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 28 அன்று, மையப்படுத்தப்பட்ட மற்றும் பிற முக்கிய தேர்வுகளை கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்துள்ளது.