புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு புதிய கொவிட்19 பாதிப்பு மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,640-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பிய மலேசியராவார். உள்நாட்டில் முதல் முறையாக எந்தவொரு தொற்றும் இன்று பதிவு செய்யப்படவில்லை.
இன்று 21 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,375-ஆக உயர்ந்தது.
நாட்டில் மொத்தம் 144 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.