Home One Line P1 இன்று முதல் ஆட்சேர்ப்பு சலுகைகளுக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் ஆட்சேர்ப்பு சலுகைகளுக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்

656
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சொக்சோ  கையாளும் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு ஊக்கத் திட்டத்தின் (பெஞ்சானா கெர்ஜயா) கீழ் இப்போது வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

ஜூன் 5-ஆம் தேதி பெஞ்சானாவின் கீழ் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்த ஊக்கத் திட்டம், ஒவ்வொரு ஊழியர் அல்லது ஆறு மாதங்கள் வரை பணிபுரியும் பயிற்சி பெற்றவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு 600 முதல் 1,000 ரிங்கிட் வரை சலுகைகளை வழங்குகிறது.

பெஞ்சானா கெர்ஜயாவின் கீழ் முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான சுயவிவரங்களை பதிவு செய்வது ஜூன் 15-ஆம் தேதி தொடங்கியது என்று சரவணன் கூறினார்.

#TamilSchoolmychoice

“வேலை காலியிடங்களைக் கொண்ட முதலாளிகள் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான சலுகைகளைப் பெற வழங்கப்பட்ட தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

www.myfuturejobs.gov.my தளம் வேலை தேடுபவர்களுக்கு தினசரி சராசரியாக 3,088 புதிய பதிவுகளை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் 2,692 வேலை காலியிடங்கள் ஜூன் 15 முதல் 30 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

“இது மொத்தம் 113,300 வேலை தேடுபவர்களை, கிட்டத்தட்ட 95,400 காலியிடங்களுக்கு கொண்டுவருகிறது.” என்று அவர் கூறினார்.

ஊக்கத் தொகைகளில் பள்ளி முடித்தவர்கள், பட்டதாரிகள், வேலையற்றோர், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெற்றவர்களை பணியமர்த்தும் முதலாளிகளுக்கான நிதி உதவிகள் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மைஅப்ரெந்திஸ் (MYApprentice) திட்டத்தின் கீழ், வேலைக்கு அமர்த்தப்பட்டு பயிற்சிப் பெறுபவர்களுக்கு தலா 600 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்க முதலாளிகளுக்கு உரிமை உண்டு.

ஹையர்மலேசியா (HireMalaysia) திட்டத்தின் கீழ், 40 வயதிற்குட்பட்டவர்களை பணியமர்த்தும் முதலாளிகள் ஒரு தொழிலாளிக்கு 800 ரிங்கிட் ஊக்கத்தொகையைப் பெறுவார்கள்.

40 முதல் 60 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள், அல்லது ஊனமுற்றோரை பணியில் அமர்த்தியவர்களுக்கு, ஒரு தொழிலாளிக்கு 1,000 ரிங்கிட் பெறுவார்கள்.