Home One Line P2 நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் வெடிப்பு, 6 பேர் பலி

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் வெடிப்பு, 6 பேர் பலி

595
0
SHARE
Ad

சென்னை: நேற்று புதன்கிழமை, கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில், “விபத்து ஏற்பட்ட கொதிகலன் செயல்பாட்டில் இருக்கவில்லை. அது எப்படி வெடித்தது என்பது குறித்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். உயிரிழந்த 16 பேரில், 6 பேர் நிரந்தர ஊழியர்கள். 10 பேர் ஒப்பந்த ஊழியர்கள். ” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக இங்கு இம்மாதிரியான விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் என்எல்சி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் விபத்தில், 8 ஊழியர்களுக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன.