Home One Line P1 மது விடுதியில் ஒன்றுகூடியதற்காக 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது

மது விடுதியில் ஒன்றுகூடியதற்காக 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது

503
0
SHARE
Ad

சிபு: புதன்கிழமை ஒரு மது விடுதியில் ஒன்றுகூடி மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிபு காவல் துறை துணைத் தலைவர் , கொலின் பாபாட் கூறுகையில், 20 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு, கட்டுப்பாட்டு ஆணையை மீறியக் குற்றத்திற்காக 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அவர்கள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் அபராதத்தைச் செலுத்த வேண்டும்.

#TamilSchoolmychoice

கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புதன்கிழமை இரவு 9.15 மணியளவில் காவல் துறை கட்டுப்பாடு அமலாக்க குழு அந்த இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதாக அவர் கூறினார்.

“காவல் துறையினர் வந்தபோது, அவர்கள் அனைவரும் குழுவாக மது அருந்துதல் உட்பட பாடிக் கொண்டிருந்தனர்.” என்று அவர் கூறினார்.

தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது விதிமுறைகள் கீழ் இவர்கள் குற்றத்தைச் செய்துள்ளனர்.