Home One Line P1 முன்னாள் குத்தகைக்காரர் 64 பாலியல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

முன்னாள் குத்தகைக்காரர் 64 பாலியல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

648
0
SHARE
Ad

சிரம்பான்: முன்னாள் குத்தகைக்காரர் மீது அமர்வு நீதிமன்றத்தில் 64 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான உடலுறவு, காயத்தை ஏற்படுத்துதல், அடைத்து வைத்தல் மற்றும் ஒரு பெண்ணின் ஆபாச காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை வைத்திருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நீதிபதி டயானா முகமட் ரசாலி முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டினை, 58 வயதான முகமட் தாஹிர் அயூப் குற்றவாளி அல்ல என்று ஒப்புக் கொண்டார், மேலும், இது குறித்து விசாரணைக் கோரியுள்ளார்.

ஜூன் 4 முதல் 18 வரை ரெம்பாவின் பஞ்சாங்கில் உள்ள கம்போங் ஹாஜி சுலைமான் என்ற வீட்டில் 37 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 11 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

தண்டனைச் சட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அதே சட்டத்தின் பிரிவு 376 (1) கீழ் தண்டிக்கப்படலாம். இது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிறம்படிக்கு உட்படுத்தப்படலாம்.

மே 28 முதல் ஜூன் 18 வரை பாதிக்கப்பட்டவருக்கு சம்மதம் இல்லாமல் இயற்கையின் ஒழுங்கிற்கு எதிராக சரீர உடலுறவு செய்ததாக 48 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

மே 28 முதல் தொடங்கி 12 நாட்களுக்கு காயத்தை ஏற்படுத்தியது மற்றும் பாதிக்கப்பட்டவரை தவறாக அடைத்து வைத்தது, அத்துடன் கொலை செய்வதாகவும், பாதிக்கப்பட்டவரின் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை விநியோகிப்பதாகவும் அச்சுறுத்தியது போன்ற குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.

நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் 306,000 ரிங்கிட் பிணையை அனுமதித்தார். மேலும், அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.