Home One Line P2 காந்திநாதன்: கடைசியாக “ஞாபகம் இருக்கிறதா” படத்தில் தோன்றியுள்ளார்!

காந்திநாதன்: கடைசியாக “ஞாபகம் இருக்கிறதா” படத்தில் தோன்றியுள்ளார்!

663
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் நன்கு அறியப்பட்ட மூத்த திரைப்படம், தொலைக்காட்சி நடிகர் கலைமாமணி காந்திநாதன், 72, அம்பாங் மருந்துவமனையில் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.

உடல் நலக்குறைவினால் அம்பாங் மருத்துவமனியில் சேர்க்கபட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார்.

90-ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களில் தோன்றி தமது நடிப்பினால் தனக்கான ஓர் இடத்தினை காந்திநாதன் தக்கவைத்துக் கொண்டார். கலைத் தொடர்பான குடும்பத்தில் பிறந்து அதனை அவரது வாழ்நாளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எல்லா பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.

சமீபத்தில், படப்பிடிப்பை முடித்துள்ள, “ஞாபகம் இருக்கிறதா” என்ற தொலைக்காட்சி திரைப்படத்தில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம், மலேசிய கலைஞர்களுக்கு பெரும் இழப்பாக கருதப்படுவதாக பல்வேறு கலைஞர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

காந்திநாதன், சலங்கை (2007), செம்மண் சாலை (2005) மற்றும் எஸ்டெட் (2010) போன்ற படங்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.