புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,674-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 சம்பவங்களில், நால்வர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள். இருவருக்கு உள்நாட்டில் தொற்றுக் கண்டுள்ளது. அதில் ஒருவர் வெளிநாட்டினர்.
இன்று 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் ண்ணிக்கை 8,481-ஆக உயர்ந்தது.
நாட்டில் மொத்தம் 72 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவருக்கும் சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.