கோத்தா கினபாலு: சபா பெர்சாத்து கட்சி வரும் தேர்தலுக்கான தயார் நிலையில் மாநிலத்தில் தேசிய கூட்டணியுடன் தேர்தல் இயந்திரக் குழுவை அமைக்க விரும்புகிறது.
தேர்தலை எதிர்கொள்ள ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க தேசியக் கூட்டணியில் உள்ள சக கட்சி உறுப்பினர்களுடன் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்று சபா பெர்சாத்து தலைவர் டத்தோ ஹாஜிஜி நூர் கூறினார்.
இப்போதைக்கு, திடீர் தேர்தல் நடத்தப்படுமானால் எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகும் வகையில் மாநிலத்தின் அனைத்து மட்டங்களிலும் இயந்திரங்களை அமைப்பதற்கான கூட்டங்களை நடத்துவதன் மூலம் பெர்சாத்து இந்த முயற்சியை மேற்கொண்டதாக ஹாஜிஜி கூறினார்.
“இந்த கட்டத்தில், நாங்கள் பெர்சாத்துவிற்கு மட்டுமே தேர்தல் இயந்திரங்களை அமைத்து வருகிறோம். ஆனால், நாங்கள் தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, எல்லாவற்றுக்கும் இயந்திரத்தை அமைப்போம்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அம்னோ, பாஸ், பிபிஎஸ், பிபிஆர்எஸ் மற்றும் ஸ்டார் உள்ளிட்ட சபாவில் தேசிய கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் நல்லது என்றும், இது மீண்டும் பலப்படுத்தப்பட்டு வரும், தேர்தல்களில் வலுவான கூட்டணியாக மாறக்கூடும் என்றும் ஹாஜிஜி கூறினார்.