சென்னை: வெளிநாடுகளில் வேலையிழந்து வேறு வழியின்றி அங்கேயே தங்கி வந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்திய மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பாக தொடங்கி வைத்தது.
அந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 5 இலட்சம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மட்டும் 94,085 பேர் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் அதிகமானோர் உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத், ஆந்திரா மாநிலத்தில் உள்ளவர்கள் ஆவர்.
துபாயில் இருந்து அதிகபட்சமாக 57,305 இந்தியர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மேலும் 25,939 தமிழர்கள் தற்போது தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.