கோலாலம்பூர்: முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் உதவியாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்து தடுத்து வைத்துள்ளது.
நேற்றிரவு சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
கைது மற்றும் தடுப்புக் காவல் ஏன் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தனது திவால்நிலையைத் தீர்ப்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து 800,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகான குற்றச்சாட்டில், 2018- ஆம் ஆண்டில் அந்த அதிகாரி மீது விசாரணையை எம்ஏசிசி தொடங்கியது.
“பல தரப்புகளால் அவரது 800,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட கடன்கள் செலுத்தப்பட்டதற்காக அவர் எம்ஏசிசியால் விசாரிக்கப்பட்டார்.
“முகமட் சாபு தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சில நாட்களில் அவரது பெயரில் பணம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.” என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.