Home One Line P1 சைட் சாதிக் அமானாவில் இணைய அழைப்பு

சைட் சாதிக் அமானாவில் இணைய அழைப்பு

572
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமானா கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஷாஸ்னி முனீர் முகமட் இத்தீன், சைட் சாதிக் மற்றும் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட பெர்சாத்து இளைஞர் தலைவர், உறுப்பினர்களை அமானாவில் சேர அழைத்துள்ளார்.

பெர்சாத்து இளைஞர் பிரிவு, அதன் துணைத் தலைவர் ஐசாத் ரோஸ்லான் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிவித்த பின்னர் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

“பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பல பெர்சாத்து இளைஞர் தலைவர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமானாவில் அனைவரும் ஒன்றாகப் போராட அழைக்க அமானா இளைஞர்கள் விரும்புகிறார்கள்.” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சைட் சாதிக் தனது கட்சி உறுப்பியத்தை கடந்த மே 28 அன்று கைவிட்டார்.

“14-வது பொதுத் தேர்தல் முதல் இன்றுவரை, சைட் சாதிக் உள்ளிட்ட துன் மகாதீருட்ன ஒருங்கிணைந்த குழுவுடன் அமானா தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

“நிச்சயமாக, மலேசியாவிற்காக சிறப்பாகப் போராட இந்த இளம் தலைவர்கள் மற்றும் கட்சியில் ஆர்வலர்கள் பங்கேற்பதற்கு அமானா திறந்திருக்கிறது.

“இந்த பங்கேற்பு தாயகத்தின் அரசியல் அரங்கில் இளைஞர் இயக்கத்தை மேலும் உயர்த்தும் என்று அமானா நம்பிக்கையுடன் உள்ளது.” என்று ஷாஸ்னி கூறினார்.

முன்னதாக, தாம் கட்சியிலிருந்து “செல்ல வேண்டிய நேரம் இது,” என்று முன்னாள் பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தனது சேவைகள் இனி தேவைப்படாதபோது, ​​அவர் வெளியேற வேண்டிய நேரம் இது என்று அப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“கட்சியை எடுத்துக் கொள்ள வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். எனது உறுப்பியதை நீக்க விரும்பினால், அதை நீக்கிவிடுங்கள். உங்கள் முயற்சிகளை நான் தாமதிக்க மாட்டேன்.

“பெர்சாத்துவில் எனது உறுப்பியம் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கையும் நான் திரும்பப் பெறுவேன்.” என்று அவர் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான சைட் சாதிக், அரசியல் கட்சி, நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான ஒரு ‘வாகனம்’, தனிநபரின் நலனுக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் அல்ல என்று குறிப்பிட்டார்.

“இந்த பாதை எளிதானது அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதே பாதையில் செல்வோருக்கும் அதே கதி கிடைக்கும். ” என்று அவர் கூறியிருந்தார்.