Home One Line P1 அக்டோபரில் பல்கலைக்கழகங்கள் முழுமையாகத் திறக்கப்படும்

அக்டோபரில் பல்கலைக்கழகங்கள் முழுமையாகத் திறக்கப்படும்

463
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மாதத்திலிருந்து படிப்படியாக மீண்டும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

நான்கு பிரிவு மாணவர்கள் இந்த மாதத்தில் தொடங்கி தனிநபர் வகுப்புகளை மீண்டும் தொடங்கலாம். மீதமுள்ள அனைத்து மாணவர்களும் அக்டோபரில் திரும்புவர் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமட் இன்று தெரிவித்தார்.

நான்கு பிரிவுகளில் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில், உள்ளூர் மாணவர்களில் 30 விழுக்காட்டு பேரும் உள்ளனர். முதல் அல்லது நான்காம் ஆண்டு பொது பல்கலைக்கழக மாணவர்கள் மருத்துவம் அல்லது நடைமுறை பயிற்சி, பட்டறை, ஆய்வகம், ஸ்டுடியோ அல்லது சிறப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்முறை வாரிய தேர்வுகளுக்கு அமர வேண்டியவர்கள் இதில் அடங்குவார்கள்.

#TamilSchoolmychoice

இரண்டாவது பிரிவுகளில், இணைய அணுகல் அல்லது உகந்த கற்றல் சூழல் இல்லாத முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவர், மற்றும் புதிய மாணவர்கள் உட்பட பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்துலக மாணவர்களும் இதில் அடங்குவர்.

“தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு அவர்களின் திட்டங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு இயங்கலை வாயிலாகக் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருத்தமான கற்றல் முறைகளைத் தீர்மானிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

“இது சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக, உயர்கல்வி நிறுவனங்கள் இப்போதே தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து மாணவர்களும் வளாகங்களுக்குத் திரும்புவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார்.

கூடல் இடைவெளி மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று வளாகத்திற்குத் திரும்பும் மாணவர்களுக்கு நோராய்னி நினைவுபடுத்தினார்.

“250- க்கும் கீழ்பட்டவர்கள், அந்த பகுதியின் அளவைப் பொறுத்து மற்றும் கூடல் இடைவெளி நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, மாணவர் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.” என்று அவர் கூறினார்.

அனைத்து விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு மன்றம் வழங்கிய நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்துலக மாணவர்களை பதிவு செய்வதற்கு முன்னதாக, இந்த மாணவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, கல்வி மலேசியா குளோபல் சர்வீசஸில் பதிவு செய்ய வேண்டும் என்று நோராய்னி கூறினார்.

“அவர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

“அவர்கள் சுகாதார அமைச்சினால் பரிசோதனைப்பட வேண்டும் மற்றும் அந்தந்த கற்றல் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.