லாபுவான்: அமானா கட்சியின் லாபுவான் தொகுதியின் முழு தொகுதியும் இன்று கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தனர்.
இது உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருவதாகவும், அதிகாரத்துவம் மற்றும் மத்திய கட்சித் தலைவர்களை அநியாயமாக நடத்துவதே முக்கிய காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திடீர் பதவி விலகலில் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுகளும், 33 கிளைத் தலைவர்களும் அடங்குவர்.
இந்த தொகுதியை வழிநடத்திய செமாட் முஸ்தபா கூறுகையில், அமானா லாபுவான் தொகுதி குறித்து, கட்சித் தலைவர்கள் அதிகமான அக்கறை எடுத்துக் கொள்ளாதது இந்த பதவி விலகலுக்கு காரணம் என்று கூறினார்.
“கட்சியின் உள் பிரச்சனைகளை கையாள்வதில் அமானா தலைமையின் மீதான நம்பிக்கையையும், பிரதமர் பதவி தொடர்பான நம்பிக்கைக் கூட்டணி தலைமையின் தற்போதைய மோதலையும் நாங்கள் பார்த்து, நம்பிக்கை இழந்துவிட்டோம். மக்களுக்கான போராட்டங்களில் அமானாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் ஒரு குழப்பத்தில் சிக்கியுள்ளோம். ”அவர் இன்று இங்கு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.