Home One Line P1 தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகினார்!

தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலகினார்!

567
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அசார் அசிசான், தலைவர் பதவியிலிருந்து ஜூன் 29-ஆம் தேதி விலகினார்.

அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்  வரையிலும், அதன் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் தலைவர் பணிகளை மேற்கொள்வார்.

ஜூன் 30 தேதியிட்ட இஸ்தானா நெகாராவின் கடிதத்தில் அறிவிக்கப்பட்டபடி, அசாரின் பதவி விலகலை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் அப்துல்லாவுக்கு பதிலாக அசார் அசிசான் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று தேர்தல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

“தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்த காலம் முழுவதும் அவர் செய்த செயல்களுக்கும் பங்களிப்புகளுக்கும், டத்தோ அசார் அசிசான் ஹருணுக்கு எங்கள் மிகுந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்பாக துன் மகாதீர் மொகிதின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பித்தார். அதனை அவைத் தலைவர் முகமட் அரிப் ஏற்றுக் கொண்டார். இதுவே அவரை விலக்குவதற்கு மொகிதின் எடுத்திருக்கும் காரணமாகக் கருதப்படுகிறது.

மொகிதினின் தீர்மானம் வெற்றியடைய அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 111 வாக்குகளுக்கும் கூடுதலாக அவரது தரப்பு பெற வேண்டும்.

அவ்வாறு பெற முடியவில்லை என்றால் முகமட் அரிப், கோர் மிங் தொடர்ந்து தங்கள் பதவிகளில் நீடிப்பர்.

தீர்மானம் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தில் மொகிதினுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அது அமையும்.

தீர்மானம் வெற்றி பெற்றால் தேசியக் கூட்டணியின் சார்பில் புதிய அவைத் தலைவராக ஒருவரும், அவைக்கான துணைத் தலைவர் ஒருவரும் தேர்வு செய்யப்படுவர்.