Home One Line P1 முகமட் அரிப்பை நம்பிக்கைக் கூட்டணி தற்காக்கும்

முகமட் அரிப்பை நம்பிக்கைக் கூட்டணி தற்காக்கும்

524
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜூலை 13- ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முகமட் அரிப் முகமட் யூசோப், இங்கா கோர் மிங் ஆகியோரின் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளை நிலை நிறுத்த வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்துவதாகக் கூறினார்.

பதவி மாற்றத்தை இயல்பானதாக கருதுபவர்கள் நாடாளுமன்ற வரலாற்றைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்றும், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அதிகாரம், ஒரு முக்கியமான நிறுவனம் என்றும் பிகேஆர் தலைவர் கூறினார்.

“டான்ஸ்ரீ அரிப் ஒரு முன்னாள் நீதிபதியாக, அவர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாடாளுமன்ற சீர்திருத்தத்தின் முன்னோடியில்லாத சில நடவடிக்கைகளை நாங்கள் கண்டிருக்கிறோம் – குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது , நாடாளுமன்ற நடவடிக்கைகள், பயிற்சிகள், பல அனைத்துலக அமைப்புகளுடனான உறவுகள், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு தந்தது.

“எனவே, டான்ஸ்ரீ அரிப் மற்றும் துணை சபாநாயகர் இங்கா கோர் மிங் ஆகியோரை நாங்கள் உறுதியாக தற்காப்போம்.” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹருணை புதிய சபாநாயகராக நியமிக்க மொகிதின் பரிந்துரைத்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஒத்மான் சைட் துணை சபாநாயகரக்வும் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அசார் அசிசான், தலைவர் பதவியிலிருந்து ஜூன் 29-ஆம் தேதி விலகினார்.

அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்  வரையிலும், அதன் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் தலைவர் பணிகளை மேற்கொள்வார் என்று தேர்தல் ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஜூன் 30 தேதியிட்ட இஸ்தானா நெகாராவின் கடிதத்தில் அறிவிக்கப்பட்டபடி, அசாரின் பதவி விலகலை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் அப்துல்லாவுக்கு பதிலாக அசார் அசிசான் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று தேர்தல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

“தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்த காலம் முழுவதும் அவர் செய்த செயல்களுக்கும் பங்களிப்புகளுக்கும், டத்தோ அசார் அசிசான் ஹருணுக்கு எங்கள் மிகுந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.