Home One Line P1 வாகனத்தில் இருந்தபடியே திரைப்படங்கள் பார்க்க அனுமதி

வாகனத்தில் இருந்தபடியே திரைப்படங்கள் பார்க்க அனுமதி

561
0
SHARE
Ad

புத்ராஜெயா: வாகனத்தில் இருந்தபடியே திரைப்படங்கள் பார்ப்பது அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால், வாடிக்கையாளர்கள் உட்பட, அதனை வழிநடத்துபவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படுகின்றனர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

வாடிக்கையாளர்கள் அவரவர் வாகனங்களில் இருக்க வேண்டும், உணவு விற்பனையும் வாகனத்தில் இருந்தபடியே விறக்ப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“திரைப்படங்களை இயக்கப் போகிறவர்களின் இயக்கத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ரெலா பணியாளர்கள் நிறுத்தப்பட வேண்டும்.” என்று அவர் வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பல்லூடக மற்றும் தகவல் தொடர்பு, வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சகங்கள் இந்த வகையான இயக்கங்களுக்கு நடைமுறைகளை வழிகாட்டுதல்களாக வழங்கும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.