Home One Line P1 பிரதமராக சபாவைச் சேர்ந்தவர் இருக்கலாம், சிக்கலில்லை!

பிரதமராக சபாவைச் சேர்ந்தவர் இருக்கலாம், சிக்கலில்லை!

416
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: ஒன்பதாவது பிரதமராக வேண்டும் என்ற ஆலோசனையை சபா முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் முடிவு செய்யவில்லை என்றும், இது வரும் வாரம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின் போது விவாதிக்கப்படலாம் என்றும் கூறினார்.

“ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 27 வரை நாடாளுமன்றம் ஒரு மாதம் கூடும். மேலும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டி உள்ளன. எனவே நாம் அதை அங்கு விவாதிப்போம், இங்கே அல்ல,” என்று அவர் கூறினார்.

ஒன்பதாவது பிரதமராக துன் டாக்டர் மகாதிர் முகமட், தனது பெயரை பரிந்துரைத்தபோது, ​​சம்பந்தப்பட்டவர்கள் அதை முட்டுக்கட்டைக்கு ஒரு தீர்வாக பார்த்ததாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஒன்பதாவது பிரதமராக எனது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது எனக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. ஆனால், நம்பிக்கைக் ஊட்டணியின் சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில், அவை சந்தேகத்திற்கு இடமில்லாதவை என்பதை இது காட்டுகிறது. எனவே அவர்களின் முடிவுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும்.” என்று ஷாபி கூறினார்.

சபாவிலிருந்து ஒரு தலைவரை பிரதமராக வைத்திருப்பது நீடிக்கும் பிரச்சனைக்கு தீர்வாக இருக்க முடியும் என்றால், அது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

“இது நானாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் நான் முடிவு செய்யவில்லை. ஆனால், நாம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகி விட்ட நிலையில், ஏன் அவ்வாறு இருக்கக் கூடாது. நான் ஒரு சிக்கலைக் காணவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.