வாஷிங்டன்: பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதாக பாகிஸ்தான் அரசு அண்மையில் கண்டறிந்தது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம், பாகிஸ்தானிய விமான சேவையான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) சேவைக்கு சமீபத்தில் தடை விதித்தது.
இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டது. தற்போது பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) தயக்கங்களை மேற்கோளிட்டு, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமான சேவையை அமெரிக்கா இரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், பாகிஸ்தானிய விமான ஓட்டிகளில் மூன்றில் ஒரு பங்கினர் போலியானவர்கள் அல்லது முறைகேடுகள் மூலம் தேர்ச்சியடைந்தவர்கள் என பாகிஸ்தான் அரசு கண்டறிந்திருந்தது.