Home One Line P2 நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்ஹாசன்

நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்ஹாசன்

662
0
SHARE
Ad

சென்னை: தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் வில்லனாகத் தோன்றும் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக தொடர்பான வியாதியால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசன் பொன்னம்பலத்தின் உடல்நிலை குறித்து அறிந்து அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அவரது முன்னேற்றத்தைக் கண்காணிக்க, அவரும் அவரது குழுவும் பொன்னம்பலத்தை அழைத்து ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும், பொன்னம்பலத்தின் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு கமல்ஹாசன் நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டார். பொன்னம்பலம்  சுயமாக எடுத்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் அதிகம் இடம் பெற்றுள்ளார். பின்னர் அவர் படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதனா காமராஜன் போன்ற படங்களில் பொன்னம்பலம் நடித்துள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் நாட்டாமையில் வில்லனாகப் பெயர் பெற்றார். பின்னர் ரஜினிகாந்தின் முத்து, அருணாசலம், அஜித்தின் அமர்களம், விக்ரமின் சாமி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பாகத்தில் போட்டியாளர்களில் ஒருவராக பொன்னம்பலம் இருந்தார்.