Home One Line P2 மாஸ்-ஜப்பான் ஏர்லைன்ஸ் இணைந்த சேவைகள்

மாஸ்-ஜப்பான் ஏர்லைன்ஸ் இணைந்த சேவைகள்

849
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் அதிகாரத்துவ விமான சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) நிறுவனமும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து சேவைகளில் ஈடுபடப் போகின்றன.

எதிர்வரும் ஜூலை 25 முதல் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஜப்பான், மலேசியா இருநாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளைக் கூட்டாக நடத்தவிருக்கின்றன.

இதன்மூலம் பயனர்கள் கூடுதல் எண்ணிக்கையிலான விமான சேவைகளின் பயனை அனுபவிக்க முடியும்.

#TamilSchoolmychoice

ஜூலை தொடங்கி மாஸ், ஜப்பானுக்கான விமான சேவைகளைத் தொடங்குகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரு விமான நிறுவனங்களும் இணைந்து கோலாலம்பூர் – தோக்கியோவின் நரித்தா விமான நிலையம் இடையில் வாரம் ஒன்றுக்கு நான்கு சேவைகளை வழங்கும்.

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

மீண்டும் இருநாடுகளுக்கும் இடையில் சுற்றுலாப் பயணத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து இரு நாடுகளும் சந்தித்த பொருளாதார இழப்புகளை ஈடுகட்டும் விதத்தில் இந்தப் புதிய கூட்டு வணிக நடவடிக்கை அமையும்.

கொவிட் பாதிப்புகளில் இருந்து மிக விரைவாக நடவடிக்கைகள் எடுத்து அதிலிருந்து குறைந்த கால இடைவெளியில் மீட்சி பெற்ற இரண்டு நாடுகளாக ஜப்பானும், மலேசியாவும் கருதப்படுகின்றன.