புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 878,254- ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 301,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 553,471 பேர் குணமடைந்துள்ளனர். 23,174 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த ஒரு வாரத்தில் நாட்டில் ஒரு மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவிடப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 28,701 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டில்லி போன்ற மாநிலங்கள் அதிக அளவு தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன.