கோலாலம்பூர்:ஜோகூர், பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அசாலினா ஒத்மானை துணை அவைத் தலைவராக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முன்மொழிந்தார்.
இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணியாக அசாலினா திகழ்கிறார். இன்று அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் நோர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, துணை அவைத் தலைவர் இங்கா கோர் மிங் பதவி விலகினார்.
அதனை அடுத்து, 57 வயதான அசலினா இப்பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் தொடர் அமளி ஏற்பட்டதை அடுத்து அவர் பதவியேற்க முடியாது நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்றம் நாளை மீண்டும் தொடரும் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹசான் அறிவித்தார்.
அசாலினா நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.