Home One Line P1 கஸ்தூரி பட்டுவிடம், அசிஸ் மன்னிப்பு!

கஸ்தூரி பட்டுவிடம், அசிஸ் மன்னிப்பு!

667
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் தனது மோசமான வார்த்தைகளைத் திரும்பப் பெறவும், “இருண்ட, கண்ணுக்கு தெரியாதது” என்று கூறியதற்காக கஸ்தூரி பட்டுவிடம் மன்னிப்பு கேட்கவும் இன்று நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தப்பட்டது.

சபாநாயகர் அசார் ஹருணின் அறிவுறுத்தலின் பேரில் அசிஸ் இன்று மன்னிப்புக் கேட்டார்.

இருப்பினும், அவ்வாறு செய்வதற்கு முன்பு, அப்துல் அசிஸ் தாம் யாரையும் அவ்வாறு அழைக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

உண்மையில் அவர் நேற்று கஸ்தூரி இருக்கைகளில், விளக்குகள் அவ்வளவு வெளிச்சமாக இல்லை என்று குறிப்பிட்டதாகக் கூறினார்.

“இரண்டு ஆண்டுகளாக நான் அங்கே ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறேன். அந்த பகுதி இருட்டாக இருக்கும். சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முடியது.

“நான் யாரையும் கருமை என்று அழைக்கும் எண்ணம் இல்லை என்று மக்களிடம் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நானே கூட, கடவுள் என்னை கருமையாக படைத்துள்ளார். இதன் மூலம் நான் சொன்ன வார்த்தையை மீட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்கிறேன், ” என்று அவர் கூறினார்.

இருப்பினும், கஸ்தூரி தனது இடத்திலிருந்து எழுந்து அப்துல் அசிஸ் கொடுத்த காரணத்தை ஏற்கவில்லை.

அசிஸ் தனது இருக்கை பகுதியில் வெளிச்சத்தின் நிலையை குறிப்பிடுகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார். தம்மை முகப்பூச்சு தூள் அணியுமாறு கேட்டதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.

“தூள் பயன்படுத்துவதற்கான பிரச்சனையை ஏன் எழுப்ப வேண்டும்? ” என்று அவர் கூறினார்.

இதே சம்பவம் மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அசார் உறுதியளித்தார்.

இதனிடையே, நேற்று கஸ்தூரி பேசும்போது, அப்துல் அசிஸ் அவர் “இருட்டாக இருக்கிறார், பார்க்க முடியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரை “கொஞ்சம் முகப்பூச்சுத் தூளை போடுமாறு” கூறியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்.என். ராயர் சபாநாயகர், அசிஸை மன்னிப்புக் கேட்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

“உங்களிடம் ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். அத்தகைய மொழியைப் பயன்படுத்த அவரை அனுமதிக்க முடியாது. பாலிங் தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவும், மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட நான் சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன், ” என்று அவர் கூறினார்.

ஆனால், அசிஸ் “நானும் இருட்டாக இருக்கிறேன், பார்க்க முடியாது. எனவே இது ஒரு பிரச்சனை அல்ல. நானும் இருட்டாக இருந்தால் எப்படி கருத்தை திரும்பப் பெறுவது? ” என்று பதிலளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சபாநாயகர் இம்மாதிரியான பாலின ரீதியிலான அவதூறுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அசிஸ் பின்னர் தனது கருத்துக்களை திரும்பப் பெற்றார்.

எனினும் மன்னிப்பு கேட்கவில்லை. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்விவாதங்களிலும், அமளியிலும் ஈடுபட்டனர்.

இந்த நேரத்தில் திடீரென எழுந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் தக்கியூடின் ஹாசான் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.