Home One Line P1 விளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துவதற்குத் தடை

விளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துவதற்குத் தடை

589
0
SHARE
Ad

ஷா அலாம்: பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற நடவடிக்கைகள் சிலாங்கூரில் தடை செய்யப்பட்டுள்ளன.

இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக சிலாங்கூர் ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாட்டுக் குழுத் தலைவர் எங் ஸே ஹான் கூறினார்.

இந்த குற்றங்கள் தொடர்பாகப் பிடிபட்டால் குற்றவாளிகளுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த விதி சிலாங்கூர் ஊராட்சிமன்றத்தின் 2005-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து அமலுக்கு வருகிறது.