Home One Line P1 பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15 விழுக்காடு தள்ளுபடி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15 விழுக்காடு தள்ளுபடி

433
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொது உயர்கல்வி நிறுவன மாணவர்கள் தங்களின் தங்கும்விடுதி, நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணங்களுக்கு 15 விழுக்காட்டு வரை தள்ளுபடி பெறுவார்கள்.

இந்த தகவலை  உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமட் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2019/2020 கல்வி அமர்வின் இரண்டாம் தவணையில் இருப்பவர்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது மாணவர்கள், அவர்களது குடும்பங்களின் சுமைகளை குறைக்க உதவும்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தொடர்புடையவர்களின் கருத்துகளைப் பெற்ற பின்னர் பல்கலைக்கழக கட்டணக் குறைப்பு குறித்து அமைச்சகம் நிதி அமைச்சகத்துடன் விவாதித்ததாக பாரிட் சுலோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

“கலந்துரையாடலில் இருந்து, பொது பல்கலைக்கழகங்களில் தங்கும்விடுதி, நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் கட்டணங்களை 15 விழுக்காடு வரை குறைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

“அரசு மற்றும் பொது பல்கலைக்கழகங்களின் நிதி திறன்களை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர் இது செய்யப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.

கட்டணத்தை குறைப்புக்கு 72 மில்லியன் மொத்த ஒதுக்கீட்டை உள்ளடக்கியது என்று அவர் கூறினார். அதிலிருந்து 20 மில்லியன் நிதி அமைச்சகத்திலிருந்து அனுப்பப்படும் என்றும் நோராய்னி கூறினார்.

மீதமுள்ள 52 மில்லியன் நிதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட பொது பல்கலைக்கழகங்களின் உள் ஒதுக்கீட்டிலிருந்து தரப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

“நாடு முழுவதும் உள்ள பொது பல்கலைக்கழகங்களில் சுமார் 523,318 மாணவர்கள் இதனால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று நோராய்னி கூறினார்.