Home One Line P1 நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்புகிறது

நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்புகிறது

565
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செவ்வாய்க்கிழமை முதல் திட்டமிடப்பட்ட நீர் விநியோகம், ஒரு சில இடங்களில் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூரில் 77 விழுக்காடு அல்லது 223 பகுதிகளில் இன்று காலை 9 மணி வரை முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

தற்போது 67 பகுதிகள் மட்டுமே நீர் விநியோகத்தை மீண்டும் பெறும் பணியில் உள்ளன என்று ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி கூறினார்.

#TamilSchoolmychoice

“கோலாலம்பூரில் 100 விழுக்காடு மீட்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிலாங்கூர், அதாவது கோலா லங்காட், கோம்பாக் பகுதிகளும் 100 விழுக்காடு மீட்கப்பட்டன. கிள்ளான், ஷா அலாம் (62 விழுக்காடு), பெட்டாலிங் (89 விழுகாடு)” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலாலம்பூர் மற்றும் கோலா லங்காட் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்  தடை ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 420,000 பயனர்கள் கடந்த ஜூலை 14 முதல் 17 வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகளை சந்திப்பர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.