Home One Line P1 ஷாபியை துணைப் பிரதமர் பதவிக்கு அணுகவில்லை!- மொகிதின்

ஷாபியை துணைப் பிரதமர் பதவிக்கு அணுகவில்லை!- மொகிதின்

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வாரிசான் தலைவர் ஷாபி அப்டாலுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்குவதாகக்  கூறியதை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மறுத்துள்ளார்.

இந்த விவகாரத்தை ஷாபி அப்டால் அண்மையில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் வெளிப்படுத்தினார்.

ஷாபியின் கூற்று முற்றிலும் அவரது கற்பனையே என்று பிரதமர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“மார்ச் மாதத்தில் நான் அவருக்கு (ஷாபி) துணைப் பிரதமர் பதவி வழங்குவதாகக் கூறவில்லை.

“ஷாபியின் கூற்றினை நான் மறுக்கிறேன். அது முற்றிலும் அவரது ஊகம் மட்டுமே” என்று பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், பிரதமர் மொகிதின் யாசின் தம்மை தேசிய கூட்டணி அரசாங்கத்தின் துணைப் பிரதமர் பதவியை வகிக்க அழைத்ததாக ஷாபி அப்டால் அண்மையில் தெரிவித்திருந்தார்.

“அவரிடமே கேளுங்கள்.” என்று அவர் கூறியிருந்தார்.

தேசிய கூட்டணியை பலப்படுத்த வாரிசானின் ஆதரவு வேண்டும் என்று மொகிதின் தம்மிடம் பேசியதாக அவர் கூறினார்.

“அவர் என்னிடம் அதனைக் கூறவில்லை. ஆனால், இந்த விவகாரம் எனக்குத் தெரியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய கூட்டணி ஆட்சி அமைத்த இரண்டு வாரத்திற்குப் பிறகு தம்மை பிரதமர் அழைத்ததாக ஷாபி குறிப்பிட்டிருந்தார்.

“அப்போது அவர் பிரதமராக இருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். இதுதான் நாம் பேசுவதற்கான சரியான நேரம்,” என்று அவர் தெரிவித்தார்.

ஆயினும், தாம் இது அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தையாக இருக்க விரும்புவதாக ஷாபி தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.