Home One Line P1 கொவிட்19: 4 புதிய தொற்றுக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கொவிட்19: 4 புதிய தொற்றுக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

470
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,755-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 18 சம்பவங்களில் பத்து பேர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் எண்மர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று மூவர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8541-ஆக உயர்ந்தது.

நாட்டில் மொத்தம் 92 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரட்டை இலக்கு எண் பதிவாகி உள்ளது. மேலும், புதிதாக நான்கு தொற்றுக் குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.