ஈப்போ: வாகனத் திரையரங்கை நேற்று வெள்ளிக்கிழமை இங்கு அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக பேராக் திகழ்கிறது.
டவுன்டவுன் மேருவில் அமைந்துள்ள தளத்தில், 70 வாகனங்கள் இருந்து பார்க்கக்கூடிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது பேராக் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டின் (பிசிபி) முன்முயற்சி என்று பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது, இந்த வாகனத் திரையரங்கை உருவாக்க நான் தூண்டப்பட்டேன்.
“இந்த திரையரங்கு அறிமுகம் பேராக் சுற்றுலாத் துறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட்19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்ட ஈப்போவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளை புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று நேற்று வாகனத் திரையரங்கை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
ஒவ்வொரு வாகனத்திற்கும் சிற்றுண்டி, பானங்களுடன் 36 முதல் 42 ரிங்கிட் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பிசிபி தலைமை நிர்வாக அதிகாரி சைனால் இஸ்காண்டார் இஸ்மாயில் கூறினார்.
பொது மக்கள் அதிரடி திரைப்படங்கள், பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு திரையிடல்களை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை காண முடியும். திங்கட்கிழமை திரையிடல் இல்லை.
“படத்தின் ஒலியை அந்தந்த வாகனங்களின் வானொலியில் இருந்து நேரடியாகக் கேட்க முடியும். பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பு அதிர்வெண் வழங்கப்படும்.
“இந்த வாகனத் திரையரங்கை கோலா கங்சார், கம்பார் போன்ற பிற இடங்களில் திறக்க திட்டமிட்டுள்ளோம்.” என்று அவர் கூறினார்.