Home One Line P2 ஒரு மில்லியன் பாதிப்புக்கு மத்தியில், சிறப்பான மீட்பு விகிதம்!- மோடி

ஒரு மில்லியன் பாதிப்புக்கு மத்தியில், சிறப்பான மீட்பு விகிதம்!- மோடி

608
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்று ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

ஆயினும், கொவிட்19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் காரணமாக மிகச் சிறந்த மீட்பு விகிதத்தினை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஐநா பொருளாதார, சமூக மன்ற அமர்வில் இந்த ஆண்டுக்கான உயர்மட்ட கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்தியாவில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சித்தோம். கொவிட்19- க்கு எதிரான எங்கள் கூட்டுப் போராட்டத்தில், 150- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாங்கள் உதவி வழங்கியுள்ளோம்.” என்று மோடி கூறியுள்ளார்.

இதற்கிடையில், உலகில் அதிகமான பரிசோதனைகள் செய்த நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

அதாவது சுமார் 12 மில்லியன் பரிசோதனைகளை இந்தியா செய்துள்ளதாக வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கெய்லீ மெக்கானி வியாழக்கிழமை தெரிவித்தார்.

முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு சுமார் 42 மில்லியன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.