Home One Line P1 கொவிட்19: இரண்டு நாட்களில் 24 புதிய தொற்றுகள் மட்டுமே!

கொவிட்19: இரண்டு நாட்களில் 24 புதிய தொற்றுகள் மட்டுமே!

612
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த இரண்டு நாட்களில் 24 புதிய கொவிட்-19 தொற்றுகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை (ஜூலை 18) வரையிலான ஒரு நாளில் 9 புதிய பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டன.

அதில் 5 தொற்றுகள் உள்நாட்டிலேயே பீடிக்கப்பட்டவை. எஞ்சிய 4 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை வரையில் 8,764-ஆக உயர்ந்தது.

ஐவர் குணமடைந்து வீடு திரும்பியதில் முற்றாகக் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,546 ஆக இருந்தது. குணமடைந்தோரின் விழுக்காடு, தொற்று பீடிக்கப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 97.51 விழுக்காடாகும்

மரணங்கள் ஏதும் நிகழவில்லை.

ஞாயிற்றுக்கிழமை ஜூலை 19 வரையிலான நிலைமை

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 19 வரையிலான ஒரு நாளில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இதில் 4 தொற்றுகள் இறக்குமதியானவை. எஞ்சிய 11 தொற்றுகள் உள்நாட்டிலேயே பீடிக்கப்பட்டவை.

இதைத் தொடர்ந்து நேற்று வரையிலான தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 8,779 ஆக உயர்ந்தது. குணமடைந்து 7 பேர் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,553 ஆக உயர்ந்தது.

நேற்று வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆகும். இதில் இருவர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவருக்கு மட்டுமே சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

சரவாக்கில் புதிய தொற்றுத் திரள் அடையாளம்

இதற்கிடையில் சரவாக் மாநிலத்தில் உள்ள ஸ்துதோங் என்ற இடத்திலுள்ள சந்தையில் புதிய கொவிட்-19 தொற்றுத் திரள் அடையாளம் காணப்பட்டது. இதற்கு ஸ்துதோங் திரள் (Stutong Cluster) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை வெளியிட்ட சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் அந்தப் பகுதியில் உள்ள 218 கடைக்காரர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றார். இவர்களில் 213 பேர் மலேசியர்கள். எஞ்சிய ஐவர் வெளிநாட்டினர்.

இவர்களில் இருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. இந்தத் தொற்று எப்படி, எங்கிருந்து தொடங்கியது என்ற ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.