Home One Line P1 கொவிட்19: உலகளவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை

கொவிட்19: உலகளவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை

415
0
SHARE
Ad

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த தொற்றுக் காரணமாக உலகளாவிய இறப்புகளின் மொத்த எண்ணிக்கை இப்போது 603,000- க்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள்படி, 24 மணி நேரத்தில் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,000- க்கும் மேற்பட்ட சம்பவங்களாக உயர்ந்துள்ளன.

#TamilSchoolmychoice

140,000- க்கும் அதிகமான இறப்புகளுடன் அமெரிக்கா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவு செய்த நாடாக உள்ளது.

கொவிட்19 காரணமாக முறையே 78,000, 45,000-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் பிரேசிலும் பிரிட்டனும் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.

மெக்சிகோ, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 38,000, 35,000 மற்றும் 30,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஸ்பெயின், இந்தியா முறையே 28,000, 26,000 கொவிட்19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளன.

ஈரானில் 14,000- க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மற்ற நாடுகளில் இன்னும் 13,000- க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன.