Home One Line P1 13 புதிய தொற்றுக் குழுக்கள் கவலை அளிக்கிறது!- பிரதமர்

13 புதிய தொற்றுக் குழுக்கள் கவலை அளிக்கிறது!- பிரதமர்

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் கொவிட்19 நோய்த்தொற்று சம்பந்தமாக 13 தொற்றுக் குழுக்கள் கணடறியப்பட்டுள்ளதை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கவலைத் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் உள்ள உணவகம், சரவாக் ஸ்டூட்டோங் மற்றும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களிடமிருந்து ஏற்பட்ட தொற்றுக் குழுக்களை முக்கியமாக பிரதமர் குறிப்பிட்டார்.

“எண்ணிக்கைகள் குறைவாக இருந்தபோதிலும், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் 13 புதிய தொற்றுக் குழுக்கள் இருப்பதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.

#TamilSchoolmychoice

“இது இன்னும் கவலை அளிக்கிறது. கடந்த சில நாட்களாக நேர்மறையான சம்பவங்கள் இரட்டை இலக்கங்களுக்கு திரும்பியுள்ளது,” என்று அவர் இன்று நேரடி ஒளிபரப்பில் தெரிவித்தார்.

இதனிடையே, முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், அதற்கான தேவை ஏற்படும் போது, அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.