Home One Line P1 இராமசாமிக்கு எதிரான ஜாகிரின் அவதூறு வழக்கு மார்ச் மாதம் விசாரிக்கப்படும்

இராமசாமிக்கு எதிரான ஜாகிரின் அவதூறு வழக்கு மார்ச் மாதம் விசாரிக்கப்படும்

699
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கு எதிராக இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் தொடுத்த இரண்டு அவதூறு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் 22 முதல் ஐந்து நாட்களுக்கு இந்த வழக்குகளின் விசாரணைகள் நடைபெறும்.

இன்று காலை வழக்கு நிர்வாகத்தின் போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதற்கான தேதிகளை நிர்ணயித்தது.

#TamilSchoolmychoice

2016-இல் ஏப்ரல் 10, 2017 அக்டோபர் 1, 2019 ஆகஸ்ட் 11 மற்றும் 2019 ஆகஸ்ட் 20 அன்று இராமசாமி வெளியிட்ட நான்கு அறிக்கைகள் தொடர்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் 16- ஆம் தேதி முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 30- ஆம் தேதி, மலேசிய இன்சைட் இணைய செய்தித் தளத்தில் நவம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக, இராமசாமிக்கு எதிராக ஜாகிர் இரண்டாவது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.

“அனைத்து சாட்சி அறிக்கைகளும் மார்ச் 1-ஆம் தேதி (அடுத்த ஆண்டு) தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்று நீதிபதி முகமட் பிரூஸ் தெரிவித்தார்.