Home One Line P1 தேசிய கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு இன்று விவாதிக்கப்படும்

தேசிய கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு இன்று விவாதிக்கப்படும்

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திடீர் தேர்தல் நடைபெற்றால் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்க அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து கோலாலம்பூரில் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த விவகாரம் குறித்து தேசிய கூட்டணி ஒரு கூட்டத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பாஸ் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

“பாஸ் கட்சியின் உதவித் தலைவராக நான் கூட்டத்தை வழிநடத்துவேன். மற்ற கட்சிகள் தங்கள் சொந்த பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கூட்டத்தில் கட்சித் தொகுதிகள் ஒதுக்கீடு, தேர்தலுக்கான பிற ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“கூட்டம் முடிந்ததும், நாங்கள் ஊடகங்களுக்கு அறிவிப்போம். ஆனால், அதற்கு முன் சற்று அமைதியாக இருப்போம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, 14- வது பொதுத் தேர்தலில் திரெங்கானுவில் வென்ற எட்டு தொகுதிகளில் ஆறு தொகுதிகளை பாஸ் தற்காக்கும் என்று சம்சூரி கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில், பாஸ் செத்தியூ, கோலா நெருஸ், கோலா திரெங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமான் நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றது.