Home One Line P1 நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது

நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது

565
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்றுநோயால் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, நீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாது.

இது குறித்து சுற்றுச்சூழல், நீர் அமைச்சர் டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

“தற்போது தீர்க்கப்படாத தொற்றுநோயால் பொருளாதாரம் மற்றும் தினசரி அழுத்தம் மக்களுக்கு சுமையாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தாது என்பதற்கு நான்  உத்தரவாதம் தருகிறேன்.

#TamilSchoolmychoice

“அக்கறையுள்ள அரசாங்கமாக, நாங்கள் செலவைச் சுமப்போம். மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

தற்போதைய காலக்கட்டத்தில் நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான உத்தரவாதம் சிலாங்கூருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துவான் இப்ராகிம் கூறினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அதிகப்படியான நீர் விநியோகம் உள்ள மாநிலங்களில் இருந்து தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்காக “நீர்-நெடுஞ்சாலை” திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது என்று அமைச்சர் கூறினார்.

“எடுத்துக்காட்டாக, பகாங், திரெங்கானுவில் இருந்து வரும் தண்ணீரை மற்ற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். கென்யீர் அணையால் நான்கு மாநிலங்களின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

உடனடி நடவடிக்கைகளுக்காக, நீர் சுத்திகரிப்பு நிலையம் நீர் ஆதாரத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்கள் உடனடியாக மலாக்காவுக்கு தண்ணீரை வழங்க முடியும் என்று அவர் கூறினார்.