Home One Line P1 இனரீதியிலான ஒப்பிட்டுமுறையைப் பயன்படுத்தி அஸ்மின் அலி சர்ச்சை

இனரீதியிலான ஒப்பிட்டுமுறையைப் பயன்படுத்தி அஸ்மின் அலி சர்ச்சை

484
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இனரீதியிலான ஒப்பிட்டை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியதற்காக அனைத்துலக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் அஸ்மின் அலி சர்ச்சைக்குள்ளாகினார்.

நம்பிக்கைக் கூட்டணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் இனரீதியான ஒப்பிட்டைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினர்.

ஒரு கார் வாங்குவதற்கான அரசாங்க ஊக்கத் திட்டங்களை உதாரணமாகக் காட்டி “மாக்சிக் கியா ஒரு ‘மைவி’ வாங்கியதையும், ‘ஹாங்’ (சீனர்) ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்560ஐ வாங்கியதையும்” அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

காலிட் சமாட் (அமானா-ஷா அலாம்) பின்னர் அந்த அறிக்கைக் குறித்து எழுந்து கேள்வி எழுப்பினார்: “இது இனரீதியிலான ஒப்பிட்டுமுறை ”

இருப்பினும், அஸ்மின் தனது அறிக்கையை ஆதரித்தார்.

“நான் முன்பு ஒரு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டேன். காலிட் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் பயன்படுத்தினால் மற்றொரு உதாரணம் என்னால் மாற்ற முடியும் …..” என்று அவர் கூறினார்.

அதற்கு பதிலளித்த காலிட், அஸ்மின் “மிஸ்டர்” என்பதற்கு பதிலாக “மாண்புமிகு” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

ஆங் கியான் மிங் (ஜசெக-செர்டாங்) பின்னர் அஸ்மின் இனரீதியிலான ஒப்பிட்டைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறினார்.

“தேவையில்லாத இந்த ஒப்பீடு, சீனர் மெர்சிடிஸை வாங்கியது, மலாய்க்காரர் மைவியை வாங்கியது, ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.