ஈப்போ: யூடியூபில் பிரபலமாக இருந்த பவித்ராவின் கணவர் சுகு காவல் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அபாயகரமான ஆயுதத்தை வைத்திருந்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே, சுகு பவித்ராவை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“பவித்ரா தனது உறவினரைப் பார்க்க பிரசவ அறைக்கு வந்திருந்தார்
“குடிபோதையில் இருந்த பவித்ராவின் கணவர், பவித்ராவுடன் தகராறு ஏற்பட்டு, அடித்தார்” என்று வட்டாரம் தெரிவித்தது.
மேலும், அவர் தம்முடன் ஓர் அரிவாளையும் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.
“கடந்த திங்கட்கிழமை (ஜுலை 20) விருது பெற்ற போது, தமது பெயரை பவித்ரா கூறாதது இந்த தகராறுக்கு முக்கியக் காரணம் என்று நம்பப்படுகிறது” என்று அவர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை பவித்ராவுக்கு ஈப்போ நகரத்தின் அடையாளம் என்ற விருது வழங்கப்பட்டது. அதனை நகராட்சி மன்றத் தலைவர் டத்தோ ருமாய்சி பாஹாரின் வழங்கினார்.
இந்த கைது நடவடிக்கைக் குறித்து ஈப்போ காவல் துறைத் துணைத் தலைவர் அஸ்மாடி அப்துல் அசிஸ் உறுதிப்படுத்தினார்.
“நாங்கள் இப்போது இந்த வழக்கினை விசாரித்து வருகிறோம்” என்று அவர் கூறினர்.