Home One Line P1 கடலடி சுரங்கப்பாதை: எம்ஏசிசி குவான் எங்கை விசாரிக்கிறது

கடலடி சுரங்கப்பாதை: எம்ஏசிசி குவான் எங்கை விசாரிக்கிறது

607
0
SHARE
Ad

புத்ராஜெயா: சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணைக்கு,  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்கை அழைத்துள்ளது.

புதன்கிழமை (ஜூலை 22) மதியம் 1.05 மணிக்கு இங்குள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு அவர் வருகைப் புரிந்தார்.

லிம் 2008 மற்றும் 2018- க்கு இடையில் பினாங்கு முதல்வராக பணியாற்றினார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு தொடர்பாக எம்ஏசிசி இதுவரையிலும் 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதில் பினாங்கு முதல்வர் சௌ கோன் யோவ், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஜகதீப் சிங் தியோ, சோங் எங், மற்றும் பீ பூன் போ ஆகியோரும் அடங்குவர்.

கொம்தாரின் 52- வது மாடியில் சைரில் கிர் ஜோஹாரி மற்றும் துணை முதல்வர் பி.இராமசாமியும் இதில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம், புதிய தடங்களைத் தொடர்ந்து எம்ஏசிசியால் மீண்டும் விசாரிக்கப்படுகிறது.