Home One Line P2 சுஷாந்த் சிங்: ‘சூசைட் அண்ட் மெர்டர்’ படம் உருவாகிறது!

சுஷாந்த் சிங்: ‘சூசைட் அண்ட் மெர்டர்’ படம் உருவாகிறது!

694
0
SHARE
Ad

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடர்பான ஒரு புதிய பாலிவுட் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்துக்கு ‘சூசைட் அண்ட் மெர்டர்’ (Suicide or Murder) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 14-ஆம் அன்று சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். அவரது ஏராளமான இரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையையும் இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

#TamilSchoolmychoice

34 வயதான நட்சத்திரம் இந்த முடிவினை எடுப்பதற்கானக் காரணங்கள் குறித்து பெரும் விவாதம் எழுந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுவருகிறது.

தற்போது, இந்த திரைப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது சுஷாந்தின் பெயரில் பணம் சம்பாதிப்பதற்கான முயற்சி அல்ல, ஆனால் பாலிவுட் ஒரு கும்பல் மூலம் எவ்வாறு இயங்குகிறது என்பதை மக்களுக்கு நிரூபிக்க எடுக்கப்படும் படம் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

முதன் முறையாக சச்சின் திவாரி என்பவர் இந்த படத்தில் அறிமுகமாகிறார்.