Home One Line P1 தூதரகத்தில் ஒளிந்திருந்த சீன ஆராய்ச்சியாளர் கைது

தூதரகத்தில் ஒளிந்திருந்த சீன ஆராய்ச்சியாளர் கைது

617
0
SHARE
Ad

வாஷிங்டன்: சீனாவின் சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருந்த சீன ஆராய்ச்சியாளர்  அமெரிக்க அமலாக்கப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.

எப்.பி.ஐ காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட ஜுவான் டாங் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று நீதித்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் ரைமொண்டி உறுதிப்படுத்தினார்.

சீனாவின் சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகம் வியாழக்கிழமை ஜுவான் டாங்கிற்கு அடைக்கலம் கொடுத்ததாக நீதித்துறை குற்றம் சாட்டியது.

#TamilSchoolmychoice

அந்நபர் பெய்ஜிங்கின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) இரகசிய உறுப்பினர் என்றும் அது கூறியது.

விசா மோசடி சந்தேகத்தின் பேரில் ஜூன் 20 அன்று எப்.பி.ஐ அவரை விசாரித்தனர்.

அவர் எப்போதாவது இராணுவத்தில் பணியாற்றினாரா என்பது குறித்த விசா விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு டாங் “இல்லை” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவர் பி.எல்.ஏ விமானப்படையின் அதிகாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.