Home One Line P1 கொவிட்19: தமிழகம் இரண்டாவது மோசமாகப் பாதிகப்பட்ட மாநிலம்!

கொவிட்19: தமிழகம் இரண்டாவது மோசமாகப் பாதிகப்பட்ட மாநிலம்!

596
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் நேற்று சனிக்கிழமை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2 இலட்சத்தினைக் கடந்துள்ளது.

நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 61,729 நபர்களில் 6,988 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அம்மாநிலத்தில்  ஒட்டு மொத்த பாதிப்பு 206,737- ஆக அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று 7,758 நபர்கள் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 151,055- ஆக அதிகரித்துள்ளது.

89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,409- ஆக அதிகரித்துள்ளது.